amala paul

திரைத்துறையினர் போராட்டம் முடிவுக்கு பின் கடந்த வெள்ளியன்று விஷாலின் இரும்புத்திரை, அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள், கீா்த்திசுரேஷ் நடிப்பில் நடிகையர் திலகம், அரவிந்த்சாமி அமலாபால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய நான்கு படங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் திடீரென பாஸ்கர் ஒரு ராஸ்கல் போட்டியிலிருந்து விலகியது.

baskar oru rascal1

இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்றது. பின் தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு, டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்ட நிலையில் படத்தினை திடீரென தள்ளிவைத்துள்ளது படக்குழு. ஏற்கனவே நான்கு முறை தள்ளிவைக்கப்பட்டு இருந்த இந்த படமானது டிக்கெட் முன்பதிவு கூட தொடங்கிய நிலையில் வெளியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஏன் திடீரென படத்தை தள்ளிவைத்தற்கான காரணத்தை கூறவில்லை தயாரிப்பு நிர்வாகம். ஏற்கனவே நேற்று சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டரில் பத்திரிக்கையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில் ஏன் இன்று படம் வெளியாகவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடைசி நேரத்தில் படம் வெளியாக வில்லை என்ற அறிவிப்பை அறிந்த அரவிந்தசாமியும் மனக்குமறலை கொட்டியுள்ளார். இனிமேல் படத்தை பற்றி அறிவிப்பை தான் தெரிவிக்க போவதில்லை என்றும், எந்தவொரு புரோமோஷனும் செய்ய போவதில்லையும் கூறி அதிருப்தி அடைந்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் நாயகி அமலாபாலும் அதிருப்தி அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், படம் வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.ஆனால் ரிலீஸை எதற்காக தள்ளி வைத்துள்ளனர் என்றே தெரியவில்லை. படம் விரைவில் ரிலீஸாகும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Loading...