பாடல் வெளியீட்டு விழாவுக்கு கவர்ச்சியாக வந்த அமலா பால்

சுசி கணேசன் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் திருட்டுப் பயலே 2.  பாபி சிம்ஹா,பிரசன்னா மற்றும் அமலாபால் நடித்துள்ளார்.  இந்த படத்தின் ப்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியானது. அதில் அமலா பால் மிகவும் கவர்ச்சியாக காணப்பட்டார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திருட்டு பயலே படம் கள்ளக்காதல் தொடர்பான படம் என்பதால் திருட்டு பயலே 2 படமும் அவ்வாறே இருந்தால், இது அமலா பால் கவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்பட்டது

 

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ள இந்த படத்தின்  பாடல்கள் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அமலாபால் கவர்ச்சியான உடையில் வந்தார். பொதுவாகவே விழாக்களுக்கு அமலாபால் கவர்ச்சி உடை அணிந்து வருவதில்லை. ஆனால் நேற்றைய விழாவில் கவர்ச்சி தூக்கலன உடையில் கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது