amala paul
amala paul

முண்டாசுப்பட்டி வெற்றி படத்தை இயக்கிய ராம்குமார் அடுத்து ராட்சசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷ்ணு,அமலாபால்,முணீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்பம் தொடர்பான விழா ஒன்றில் கலந்துகொண்ட அமலாபால் கூறுகையில்,

இயக்குனர் முதலில் இந்த கதையை என்னிடம் சொன்னபோது எனக்கு புரியவில்லை. பிறகு விஷ்ணு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த கதையை பற்றி சொன்னார். நல்ல வித்யாசமான கதையாக இருந்தது. விஷ்ணு ஒரு நல்ல நடிகர். இந்த படம் அவருக்கு ஒரு பெரிய இடத்தை கொடுக்கும். எனக்கு உண்மையான நண்பர் அவர் என்று கூறினார்