நடிகை அமலாபால் தி. நகர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்த்தார். அதில் நடனப்பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். அமலாபாலின் இந்த துணிச்சலைப் பாராட்டி தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த விஷாலுக்கு அமலாபால் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி விஷால். பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டை போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார். அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலாக இருந்தது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.