விஜய்-அமலாபாலுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்…

04:21 மணி

நடிகை அமலாபால், இயக்குனர் விஜய் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைனா படம் தமிழ் பட உலகில் பிரபலமானவர் அமலாபால். அதன்பின் இவர் இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. அவர்களின் திருமணம் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி நடைபெற்றது.

ஆனால், திருமணமான 2 ஆண்டுகளில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  அதன் பின் அவர்கள் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812