நடிகை அமலாபால் தற்போது காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அது என்னவென்றால் நடனப்பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். புகார் அளித்த சில மணி நேரத்திற்குள் அந்த நபரை போலீசார்  கைது செய்துள்ளனா்.

நடிகை அமலாபால் சிந்து சமவெளி படத்தில் நடித்ததிருந்தாலும் மைனா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார். பின் வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், காதலில் சொதப்புவது எப்படி, அம்மா கணக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பின் இயக்குநா் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பின் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை அமலாபால் நடனப்பள்ளி ஆசிரியா் ஒருவா் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள காவல் நிலையத்தின் துணை ஆணையா் அலுவலகத்தில் இதுகுறித்து அவா் புகார் அளித்துள்ளார்.

டான்ஸ் மாஸ்டா் ஒருவா் நடன வகுப்பின் போது தன்னிடம் ஆபாசமாக பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அமலாபால் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.இயக்குநா் ஏ.எல் விஜயுடன் ஏற்பட்ட மன வேறுபோடு காரணமாக விகாரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.ஏற்கனவே கார் வாங்கியதில் மோசடி வழக்கில் சிக்கிய அமலாபால் தற்போது மேலும் ஒரு சா்ச்சையில் சிக்கியுள்ளார்.

அமலாபால் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் சென்னை கொட்டிவாகத்தை சோ்ந்த தொழிலதிபா் அழகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.