வடசென்னை படத்திலிருந்து வெளியேறிய அமலாபால்?

10:06 மணி

தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் வட சென்னை படத்திலிருந்து நடிகை அமலாபால் விலகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Loading...

சில மாதங்களுக்கு முன்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் திடீரென அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் அதில் நடிக்க இருந்த சமந்தா அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதில் அமலாபால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படப்பிடிப்பு நடைபெறவில்லை. அந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகினார்.

மேலும், தனுஷ், கொடி படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதன் பின் விஐபி 2 படத்தில் நடித்து முடித்தார். கூடவே பவர்பாண்டி படத்தையும் இயக்கி முடித்தார். தற்போது ப.பாண்டி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே, வட சென்னை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து அமலாபால் விலகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு பதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

(Visited 26 times, 1 visits today)
The following two tabs change content below.
சிவ குமார்

சிவ குமார்

சிவகுமார்(Trainee Subeditor)- இவர் திரைத்துறையை சார்ந்தவர்.கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இணையதள செய்தி பிரிவிற்கு புதியவர். ஆனாலும் அனுபவம் உள்ள ஆசிரியர் போன்று செய்திகள் கொடுப்பது இவரது சிறப்பு. தொடர்புகொள்ள- 9788855544