தமிழ் நடிகர்களில் தனக்கு மிகவும் பிடித்தவர் தனுஷ்தான் என நடிகை அமலாபால் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அமலாபால், இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்தார். அதன்பின் அவர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. மேலும், நடிகர் தனுஷ், அமலாபால் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் வலம் வந்தன.

இந்நிலையில் நடிகர் தனுஷ் பற்றி கருத்து தெரிவித்த அமலாபால் “ நடிகர்களில் தனுஷ்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் பல திறமைகள் உள்ளன. கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்வார். தனுஷ் படங்கள் என்றால் அவர் நினைவுக்கு வரமாட்டார். அவரது கதாபத்திரங்கள்தான் நம் கண் முன்னால் வரும். அந்த அளவுக்கு அவர் திறமையான நடிகர்” என அவர் புகழ்ந்துள்ளார்.