நடிகை அமலாபால் லுங்கி அணிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் விஜயை விவாகரத்து செய்த பின் அமலாபால் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், அவரின் அன்றாட நிகழ்வுகளை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். சில சமயம் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவார். அதற்கு ரசிகர்கள் தெரிவிக்கும் எதிர்மறையான கருத்துகளை அவர் கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், லுங்கி அணிந்த படி அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை அமலபால் சமீபத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு அமலாபால் வேஷ்டி அணிந்திருந்த புகைப்படம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.