பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை: திடீரென அமலாபால் சொல்ல காரணம்?

ரஜினியின் மகள் சௌந்தா்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் விஜபி 2 படத்தில் அமலாபால் நடித்துள்ளாா். இந்த படமானது நாளை திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தை அடுத்து அமலாபால் நடிப்பில் திருட்டுப்பயலே படமும் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.   பாபி சிம்ஹா, பிரசன்னா உள்ளிட்ட நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாாிப்பில் சுசி கணேசன் இயக்கி உள்ளாா்.

அமலாபால் டைரக்டா் விஜயை காதலித்து திருமணம் செய்து, அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்து பெற்ற பின்னர் அமலாபால் தொடா்ந்து பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறாா். விஜபி 2 படத்தின் புரோமோஷனுக்காக அமலாபால் கேரளா, ஆந்திரா என பிசியாக சுற்று பயணம் செய்து வருகிறாா்.இந்த சமயத்தில் இவா் ஒரு பேட்டியில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று கூறியுள்ளாா். இப்படி இவா் திடீரென இந்த நேரத்தில் இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்ற கேள்வி  ரசிகா்கள் மத்தியில் எழுந்துள்ளது.