நடிகை அமலாபால் இயக்குநர் விஜய்யை திருமணம் செய்தார். இவருக்குமிடையில் மன கசப்பு ஏற்பட்டு விவகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவருக்கு திருமண வாழ்க்கை சொல்லும்படியாக அமையவில்லை. இதற்கி்டையில் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்தததாக வழக்கு என பல பிரச்சனைகளை கடந்து சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவா் பார்க்கில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்துபோது எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகா்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் பிசியாக நடித்து பிரபலமானவா் அமலாபால். திருமணம் வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டு விவாகரத்து செய்த பின் தற்போது பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது உடலை சிலிம்மாக வைத்து கொள்ளுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக யோகாசனமும் கற்று வந்தார். யோகாசன
பயிற்சியாளரை வைத்து யோகா கற்று வருகிறார்.

தற்போது அமலாபால் ஒரு பூங்காவில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் போட்டோவை சமூக வலைத்தளத்த்தில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த அவரது ரசிகா்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்கின்றனா். இப்படி அமலாபால் தலைகீழாக நின்று யோகாசனம் செய்து வருகிறார் வியப்படைந்துள்ளனா் ரசிகா்பெருமகக்கள்.

இதுபற்றி அமலாபால் கூறியதாவது, எனக்கு யோகாசனம் செய்வதில் அதிக ஆா்வம் உண்டு. சிராசனம் செய்வது பற்றி எனது யோகா குரு சொல்லி கொடுத்தார். ஆனால் அந்த ஆசானத்தை என்னால் தனியாக செய்ய முடியவில்லை. எனது குரு அல்லது மற்றவா் உதவி இருந்தால் மட்டும் தான் அந்த யோகாசனத்தை என்னால் செய்ய முடிந்தது. தற்போது யாருடைய உதவியும் இல்லாமல் அதனை செய்ய முடிந்தது. இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. நான் குழந்தையை போல அங்கும்மிங்கும் ஓடி பூங்காவை சுற்றி எனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன். இவ்வாறு அவா் கூறியுள்ளார்.