இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்நிலையில் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்து விட்டதாக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுளள்ளார்.

விரைவில் வெளிவர தயாராகி கொண்டிருக்கும் செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். பெரிய இயக்குனர் மணிரத்னம் சார் படத்தில் முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வாய்ப்பு கிடைத்தில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மணிரத்னம் படக்குழு துபாய் செல்ல இருக்கிறது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். அரவிந்த் சாமி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்களுடைய பகுதிகளை முடித்துக் கொடுத்து விட்டதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்கள்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, அதில் என்னுடைய காட்சிகள முடிந்து விட்டது. மணிரத்னம் சாருடன் வேலை செய்தது என்ன ஒரு அற்புதமான அனுபவம் என்றும் இது என் வாழ்நாள் கனவு என்றும், ரொம்ப நன்றி சார் என்று தெரிவித்துள்ளார்.