இந்தியாவின் நம்பன் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் கார் டிரைவரின் சம்பளம் எவ்வளவு எனக்கேட்டால் வாயை பிளப்பீர்கள்…

மும்பை நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள அவரின் அண்டிலியா என்ற பிரம்மாண்ட வீடே ஆடம்பரத்தின் உச்சமாகும். மொத்தம் 27 அடுக்குகள் கொண்ட இந்த வீட்டில் 6 தளங்கள் கார்களை நிறுத்துவதற்காகவே கட்டப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினர் பயன்படுத்தும் விலை உயர்ந்த கார்களை நிறுத்துவதற்காகவே கட்டப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியிடம் பணிபுரியும் கார் ஓட்டுனர்கள் கூட நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர்களாகவே கருதப்படுகிறார்கள். சாஃப்ட்வேர் ஊழியர்களை விட அவர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள். பலருக்கும் 2 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதிலும், முகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டும் ஓட்டுனருக்கு சம்பளம் இன்னும் அதிகம் எனக்கூறப்படுகிறது.