Anil ambani
Anil ambani

தனது செல்ல மகளின் திருமணத்திற்கு அம்பானி பல கோடிகளை இறைத்து திருமண செலவுகளை செய்துள்ளார்.

உலக மகா கோடீஸ்வரர்களில் ஒருவரான அனில் அம்பானியின் மகள் இஷாவுக்கும், தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக 8 மற்றும் 9ம் தேதிகளில் உதய்பூர் நகரத்தில் திருமணத்திற்கு முந்தையை சடங்குகள் நடைபெற்றன.

இதையும் படிங்க பாஸ்-  ரூ.800 கோடி பட்ஜெட் ; இரண்டு பாகங்கள் : ஆச்சர்யபடுத்தும் மணிரத்னம்

இந்த விழாவில் பங்குபெற ஹிலாளி கிளிண்டன், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் மற்றும் அம்பானியின் உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோர் உதய்பூர் சென்றனர். அவர்களை மும்பையிலிருந்து அழைத்து செல்லவே 50 தனியார் விமானங்கள், 1000 ஆடம்பர கார்கள் என 2 நாட்கள் உதய்பூர் நகரமே களை கட்டியது.

இதையும் படிங்க பாஸ்-  மெர்சல் குழுவினர்களுக்கு தங்கப்பரிசு கொடுத்த விஜய்

இந்நிலையில், புதுமண தம்பதிக்கு ரூ.450 கோடி மதிப்பில் திருமண பரிசு மட்டுமே அனில் அம்பானி கொடுத்துள்ளாராம். ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 2.0 படத்தின் பட்ஜெட்டே அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட ஒரு பத்திரிக்கையின் செலவே ரூ.3 லட்சம்.  மொத்தமாக பார்க்கும்போது, எப்படியும் அனில் அம்பாணி மகளின் திருமண செலவு ரூ.1000 கோடியை தொட்டிருக்கும் அல்லது தாண்டியிருக்கும் எனப்பேசப்படுகிறது.