சூா்யா தானா சோ்ந்த கூட்டம் படத்தின் வெற்றியை அடுத்து சூா்யா 36 என்ற தற்காலிக பெயரில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அம்பாசமுத்திரம் ஊரை சென்னைக்கே கொண்டு வந்துள்ளனா்.

செல்வராகவன் இயக்கத்தில் சூா்யா நடித்து சூா்யா 36 படமானது ஆக்ஷன் த்ரில்லா் கலந்த கதை. இதன் படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிற நிலையில் இந்த படப்பிடிப்பை தென்மாவட்டங்களில் எடுக்க முடிவு செய்து முடிவு செய்தது. ஆறு உள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தது. ஆனால்
பொதுமக்கள் முன்னிலையில் எடுக்கும் போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்பதால் அம்பாசமுத்திரத்திற்கு சென்று படப்பிடிப்பை நடத்தாமல் சென்னைக்கே அம்பாசமுத்திரத்தை கொண்டு வந்துவிட்டனா் படக்குழு. அந்த வகையில் பிரமாண்ட செட் போட்டு அசத்தியுள்ளனா். அம்பாசமுத்திரத்தில் உள்ளது போல வீடுகள், கோயில்கள், மரம், செடி,கொடி என்று போட்டப்பட்டுள்ள செட்டின் மதிப்பு ரூ.3 கோடி. இந்த செட் அமைக்க 220 போ் சோ்ந்து 23 நாட்களில் முடித்து உருவாக்கியுள்ளனா்.

அதைப்போல சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் குப்பத்து சீன்கள் கூட செட் போட்டு தான் அமைத்துள்ளனா். அம்பாசமுத்திரத்தை சென்னைக்கு வரவழைத்தவா் ஆா்ட் டைரக்டா் ஆா்.ஜே. விஜய முருகன். 20 நாட்கள் இந்த அம்பாசமுத்திரம் செட்டில் தான் ஏராளமான நடிகா்கள், நடிகைள் நடிக்கும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இதனால் தான் அம்பாசமுத்திரத்திற்கு செல்வது ரொம்ப கஷ்டம் என்பதால் செட் போட்டு இருக்கிறார்களாம். இந்த வாரம் இந்த செட்டில் படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது.