இன்று ராகவேந்திரர் பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பத்தூரில் சாய்பாபா சிலை திறக்க ஏற்பாடு செய்துள்ளார் லாரன்ஸ்.

இன்று உலகம் முழுவரும் ஸ்ரீ ராகவேந்திரா் பிறந்த நாள் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சீரடி சாய்பாபா சிலையை அம்பத்தூரில் உள்ள ராகவேந்திரா கோயிலில் நிறுவி பிரதிஷ்டை செய்கிறார். இரண்டு மாபெரும் குருக்கான ஸ்ரீ ராகவேந்தரும் சீரடிசாய்பாபாவும் ஒரே இடத்தில் இருப்பது போல ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்பது லாரன்ஸின் நீண்ட நாள் கனவு. அதை இன்று நிறைவேற்றி இருக்கிறார். இந்த சிலையை அமைக்கும் பொருட்டு ராஜஸ்தானில் ஆா்டர் கொடுத்து 5 அடி உயர சிலையை இதற்காக தயார் செய்து வரவழைத்து இன்று காலை 10மணி முதல் 11.30 மணி வரை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை செய்கிறார் லாரன்ஸ்.