முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் திடீரென மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 93 வயது. கடந்த வாரம் அவரது மனைவி பார்பரா புஷ் காலமானார். அமெரிக்க ஜனாதிபதிகளில் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையை பெற்றவா் இவரது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ். இவரும் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர். இந்நிலையில் ஜார்ஜ் புஷ் ரத்தத்தில் பரவிய தொற்று நோய் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹூஸ்டள் நகரில் உள்ள மெரதஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஏற்பட்டுள் தொற்று பாதிப்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிருக்கே ஆபத்தான தொற்று காணரமாக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று முன்னாள் அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று திரும்பி நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.அவா் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.