மெக்சிகோவில் இருந்து, அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இரு இந்தியர்கள் உட்பட, 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

வட அமெரிக்க நாடான, மெக்சிகோவைச் சேர்ந்த, 19 பேர், அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றனர்.

இவர்களில் இருவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்களாவர் இதை கேள்விப்பட்ட அதிகாரிகள் அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள், அவர்களை சுற்றி வளைத்து, கைது செய்தனர். இதில், இருவருக்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களிடம், அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.