அமீர்கானின் ஹிந்தி படங்கள் பற்றி சொல்ல தேவையில்லை. தமிழில் கமல்ஹாசன் போல ஹிந்தியில் அமீர்கான் என்று சொல்லலாம் வித்தியாச வித்தியாசமான படங்களில் நடிப்பது கதைகளை தேர்ந்தெடுப்பது அமீர்கானின் வழக்கம்.

சில வருடம் முன் வந்த அவரின் பிகே படம் மிகுந்த வரவேற்பை பெற்றாலும் சர்ச்சையையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்': வைரலாகும் 'வசமாக்கு' பாடலின்புதிய புரமொ

அவர் நடித்த தங்கல் திரைப்படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இப்போது அமீர்கான் நடித்து வரும் திரைப்படம் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் சரித்திர கால பாணியில் இந்தியாவை பற்றி சொல்லப்பட்டிருக்கும் கதையில் அமீர்கான் நடிக்கிறார்.ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார். விஜய் கிருஷ்ண ஆச்சார்யா என்பவர் இயக்குகிறார்.

நேற்று மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது ,தீபாவளிக்கு படம் வெளியாகிறது