ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குழந்தை என குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சியாக பெற்றது தங்களின் அதிர்ஷ்டம் என்றார்.

ராகுல் காந்தியை குழந்தை என குறிப்பிட்ட அமித்ஷா, இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியில் உள்ளது. பல மாநிலங்களில் ஆட்சியை இழந்துவிட்டு, சில இடைத்தேர்தல்களில் மட்டும் பெற்ற வெற்றிகள் போதும் என திருப்தி கொள்ளும் எதிர்க்கட்சியைப் பெற்றிருப்பது எங்களுக்குக் கிடைத்த பெரும் அதிர்ஷ்டம் என்றார்.

மேலும், ராகுல் காந்தி விடுமுறைக்கு எங்கு செல்கிறார் என்பதும், எங்கிருந்து வருகிறார் என்பதும் யாருக்கும் தெரியாது என குற்றம் சாட்டிய அமித் ஷா, வரவுள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.