நேற்று முன் தினம் இலங்அகியில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் நிதாஹா கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த வெற்றிக்குப்பின், இந்திய ரசிகர்கள் பலரும் இலங்கை ரசிகர்களுடன் இணைந்து வங்கதேச அணியை வெறுப்பேற்றும் வகையில் பாம்பு நடனம் ஆடினர்.

மேலும், புலியின் வாயிலிருந்த வெற்றியை தினேஷ் கார்த்திக் மீட்டெடுத்து வந்துவிட்டார் என்றும் தினேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அவருக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் பிரபலங்கள், நடிகர்-நடிகைகள், ரசிகர்கள் என சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன. இந்த நிலையில் அமிதாப் மட்டும் தினேஷிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஏன் தெரியுமா?

இந்திய அணி வெற்றி பெற்றாது தினேஷை வாழ்த்தி ட்வீட் செய்த அமிதாப், கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்று சொல்வதற்குப் பதிலாக 24 ரன்கள் என்று மாற்றி சொல்லி விட்டதாகவும், தன்னுடைய தவறான டுவிட்டுக்காக தினேஷிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.