பிரபல நகைக்கடை நிறுவனமான கல்யாண் ஜுவல்லர்ஸ் கேரளாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவது பல கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. தென்னக விளம்பரங்களில் பிரபு உள்ளிட்டவர்கள் வந்தாலும் வட இந்திய கல்யாண் விளம்பரங்களில் பெரும்பாலும் நடித்திருப்பது அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தினர்தான்.

இந்நிலையில் அமிதாப் அவரது மகள் ஸ்வேதா நந்தா நடித்துள்ள ஒரு புதிய விளம்பரத்தின் காட்சிப்படி வங்கிக்கு செல்லும் அமிதாப், பென்சன் தொடர்பாக பேச்சை எடுத்ததும் அவர் பாஸ்புக் தள்ளிவிடப்படுகிறது.

பின்னர் பல கவுண்டர் மாறி இறுதியாக ஒரு ஊழியரை பார்க்கிறார் தனக்கு பென்சன் டபுளாக கிரெடிட் ஆகியுள்ளது என்கிறார். அப்போ நீங்க பார்ட்டியில வைக்கணும் என்கிறார் ஊழியர். தவறாக ஏமாற்றுவது தனக்கு பிடிக்காது என்று சொல்கிறார் அமிதாப்.

இந்த விளம்பரத்தை பார்த்த இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பலத்த எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இது வங்கிகளையும் வங்கி ஊழியர்களையும் அவமதிக்கும் செயல் என வங்கி ஊழியர் அமைப்பின் தலைவர் சவும்யா தத்தா கூறியிருந்தார்.

இதற்கு உடனடியாக கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டிருந்தது.இருந்தாலும் மன்னிப்பு போதாது இந்த விளம்பரத்தை நீக்க வேண்டும் என இந்த அமைப்பினர் வலியுறுத்தினர்.

அனைவரது எதிர்ப்பையும் அடுத்து கல்யாண் ஜுவல்லர்ஸின் அதிகாரபூர்வ பக்கங்கள் அனைத்தில் இருந்தும் இந்த விளம்பரத்தை நீக்கி விட்டதாக அதன் தலைவர் கல்யாணராமன் கூறியுள்ளார்.