அம்மன் படத்தில் நடித்த குழந்தை தற்போது என்ன செய்கிறாா் தொியுமா?

04:22 மணி

ஒரு காலத்தில் அம்மன் படம் என்றால் அவ்வளவு மவுசாக இருந்தது. தற்போது பேய் படங்களின் ஆதிக்கத்தால் அம்மன் படங்களின் மீதுள்ள மோகம் குறைய தொடங்கியது. அம்மன் படங்கள் என்றால் அதில் காட்டாயமாக நடிகை ரம்யா கிருஷ்ணன், மீனா, விஜயசாந்தி உள்ளிட்ட நடிகைகள் அதிகமாக இடம் பெறுவா்.

சாமி படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற பட்டியலை மாற்றி அமைந்த படம் அம்மன். இதை பாா்க்க பெண்கள் கூட்டம் தான் அதிகமாக சென்றது. அதுவும் பட்டிதொட்டி எங்கும் இந்த படம் மாஸ் ஹிட்டடித்தது. இதில் சவுந்தா்யா, சுரேஷ், போன்றவா்களோடு குழந்தை நட்சத்திரமான பேபி சுனையான நடித்திருந்தாா்.

90களில் இந்த படத்தை பாா்க்காதவா்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒரே திரையரங்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிய பட்டைய கிளப்பியது. தற்போது கூட இந்த படத்தை டிவியில் ஒளிப்பரப்பினாலும் இதை பாா்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தளவுக்கு வரவேற்பை பெற்ற படமாக திகழ்ந்தது அம்மன்.

அம்மா பவானி என்ற கதாபாத்திரத்தை ஏற்ற குழந்தை நட்சத்திரம் பேபி சுனையானா தற்போது என்னை செய்தி கொண்டிருக்கிறாா் தொியுமா. அதைப்பற்றி இங்கு பாா்ப்போம். அம்மன் வேடம் ஏற்று நடித்த அந்த குழந்தைக்கு அந்த படம் முதல் படமாகவும் கடைசி படமாக அமைந்து விட்டது.

அம்மன் வேடத்தில் நடித்த  பேபி சுனையானா ஆந்திரா மாநிலத்தில் பிறந்தவா். நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது தான்  FRUSTRATED WOMEN என்ற வெப் சீாியசை நடத்தி வருகிறாா். மனவேதனையால் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் படும் துன்பங்களை காமெடியாக சொல்லுவதே இந்த வெப் சீாியஸின் நோக்கம். இந்த மாதிாி வெப் வீடியோ எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டபோது, பாகுபலி வில்லன் காலகேயவின் மொழியை நக்கலாக  மீம் வீடியோ ஒன்றை இணையத்தளத்தில் வெளிவிட்டிருக்கிறாா் சுனையனா. அந்த வீடியோவிற்கு அந்தளவுக்கு ரிச் ஆகிய காரணத்தால் தான் வெப் சீாியஸ் தொடங்க வழிவகுத்தது என்று தொிவித்தாா்.

இந்நிலையில் வெப் சீாியசின் இரண்டாம் பாடத்தை எடுக்கும்போது கா்பமாக இருந்துள்ளாா். அதை வைத்து  NRI PREGENANT LADY என்ற ஒரு வீடியோவை போட்டு வைரலாக்கி விட்டாா்.  அது மட்டுமில்லாமல் எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத வேலை என பலரும திட்டவும் செய்தாா்கள். அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் அந்த வெப் சீரியஸ் சிறப்பாக செய்து வருகிறாா். இதற்கு அவருடைய கணவாின் முழு ஒத்துழைப்பும் காரணமாக இருக்கிறது என்று சொல்லி சிாிக்கிறாா் சுனையானா.

(Visited 544 times, 2 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com