யாரவது என்னிடம் அவ்வாறு நடந்தால்?: ஆவேசமான எமி

கே. ராகவேந்திர ராவ் இயக்கிய ஜும்மாண்டி நாதம் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் டாப்ஸி. இந்த படத்தில் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திர்ருப்பார். இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியின்போது ராகவேந்திர ராவை விமர்சித்திருந்தார். டாப்ஸி கூறும்போது, ராகவேந்திர ராவ் படத்தில் நடித்தபோது, பாடல்காட்சி ஒன்றில் தொப்புளில் தேங்காய் போடுவது போல் காட்சி எடுத்தார்கள். இதில் என்ன கவர்ச்சி இருக்கிறது என்று கோபத்தை வெளிபடுத்தினார்.
இந்த நிலையில்

இது குறித்து எமி ஜாக்சன் கூறுகையில்,  தொப்புளில் தேங்காயை வீசுவது கொடுமை. இதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.  அப்படி யாரவது தேங்காயை வீசினால் நான் அந்த தேங்காயை எடுத்து அவர்கள் மீது திருப்பி வீசி விடுவேன் என்றார் அவர்.