srireddy
srireddy

தமிழ் நடிவர் ஒருவர் தனது சினிமா வாழ்க்கையை அழிக்க துடிக்கிறார் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திர நடிகைகள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறினார். தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது புகார் கூறி அதிர வைத்தார். அதன்பின் ஆந்திராவிலிருந்து வெளியேறி சென்னையில் குடியேறினார்.

இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் “பொதுக்கழிப்பறை போல் என்னை பயன்படுத்தினார்கள். அது கொடுமையானது. அதில் என் பங்கும் இருக்கிறது. சினிமா வாய்ப்புகளுக்காகவே என் உடல் அனைத்தையும் தாங்கிக்கொண்டது. நான் கண்டிப்பாக விரும்பி அதை ஏற்கவில்லை. என் வாழ்க்கையில் பயமான காலங்கள் அது. வெளிப்படையாக பேசியது என் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “இப்போது ஒரு தமிழ் நடிகர் எனது திரை வாழ்க்கையை அழிக்க முயற்சிக்கிறார். அவர் தெலுங்கு திரையுலகினருக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் ஒரு பெரிய பெண் பித்தர். நான் என்ன இந்த பூமியில் வாழ தகுதியற்றவளா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.