பிக்பாஸ் வீட்டில்  இத்தனை பெண்களுடன் எப்படி தனியாக இருந்தீர்கள் என பாலாஜியிடம் அனந்த் வைத்தியநாதன் கேட்டுள்ளார்.

 

பிக்பாஸ் 2 இறுதி நிலையை எட்டியிருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் சற்று மசாலாவை சேர்க்க பிக்பாஸ் 1 போட்டியாளர்களையும், அதேபோல் இந்த சீசனில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியளர்களும் அவ்வப்போது பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். சிநேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, ஷாரிக், ரம்யா, நித்யா, சென்றாயன், மகத் ஆகியோர் தற்பொழுது வரை பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு அனந்த் வைத்தியநாதன், மமதி, பாலாஜி ஆகியோர் வருகை தந்துள்ளனர். அதில் அனந்த் வைத்தியநாதன் பாலாஜியை பார்த்து, நீங்கள் நிறைய மாறியிருக்கிறீகள் என்றார். மேலும் பெண்களுடன் இத்தனை நாட்கள் எப்படி தனியாக இருந்தீர்கள் என கேள்வி கேட்டார். ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி ஆகியோரிடம் எப்படி இத்தனை நாட்கள் இங்கு இருக்கிறீர்கள், உங்களுக்கு பைத்தியம் பிடிக்கவில்லையா என ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டார்.