தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ள ஆனந்தி பல ஆயிரம் சிசுக்களை அழித்தவர் என்பது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் பொன்னுசாமி நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிறுப்பில் வசித்து வருபவர் ஆனந்தி. +2 மட்டுமே படித்துள்ள அவர் தன்னை மருத்துவர் எனக்கூறிக்கொண்டு பெண்களுக்கு கருவை கலைக்கும் வேலையை செய்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ஓடைக்கு அழைத்து சென்று மைனர் பெண்ணிடம் உல்லாசம் - வாலிபர் கைது
Anandhi
Anandhi

வீட்டிலேயே மருத்துவமனபோல் வசதிகள் செய்து வைத்துள்ளார். சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை தொழிலாக கொண்டிருந்தார். இவரை பற்றி போலீசாருக்கு புகார் செல்ல இன்று நேற்று அவர் போலீசாரிடம் சிக்கினர்.
ஆனந்தி, அவருக்கு உடைந்தையாக இருந்த அவரின் கணவர், ஆட்டோ டிரைவர் சிவகுமார் என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கடந்த 10 வருடங்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆனந்தி கருக்கலைப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக பல இடைத்தரகர்களை அவர் பயன்படுத்தியுள்ளார். ஒரு கருக்கலைப்புக்கு 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் பணம் வாங்கியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  என் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா? கோபத்தில் எகிறிய ஸ்ரீரெட்டி

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.