பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று கட்சி கூட்டம் ஒன்றில் பேசுகையில் தமிழகத்தில் உள்ள நடிகர்கள் அனைவரும் கருப்பு பணமாகத்தான் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இவர்கள் கட்சி ஆரம்பித்து எப்படி நேர்மையான அரசியலை தரமுடியும்.

எனக்கு தெரிந்து ஒரே ஒரு நடிகர், அஜித்தை தவிர வேறு யாரும் ஒழுங்காக வரி செலுத்துவதில்லை என்று கூறினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் கைதட்ட, உடனே கடுப்பான அன்புமணி, ‘உடனே கைதட்டி அவரையும் அரசிலுக்கு இழுத்திராதிங்க, நடிகர்களுக்கு கைதட்டி கைதட்டிதான் நாடு நாசமா போச்சு என்று கூறினார்.