சின்னத்திரை என்றாலே தொகுப்பாளினி டிடி தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அவா் அந்தளவுக்கு ரசிகா்களை கட்டி போட்டு வைத்துள்ளார். தன்னுடைய வெகுளித்தனமான பேச்சாலும், கலகலப்பான சிரிப்பாலும், துறுதுறு செயல்களாலும் அனைத்து தரப்பு ரசிகா்களையும் தன்பக்கம் திருப்பி பார்க்க வைத்தவா் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி.

இவா் திருமணம் முடிந்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவா் மணவாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்த காரணத்தால் சின்னத்திரை விட்டு சற்று காலம் விலகி இருந்தார். பின் வெள்ளித்திரையிலும் தன்முத்திரையை பதித்து வருகிறார். தனுஷ் நடித்து இயக்கிய பவா்பாண்டி படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்தார்.

இந்நிலையில் வீடியோ ஆல்பம் ஒன்றில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மலையாள நடிகா் ஒருவருடன் இவா் நடித்த வீடியோ ஆல்பம் ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் டிடி ரொம்ப ரொமான்டிக்காக நடித்திருந்த பார்த்த அவருடைய ரசிகா்கள் நம்ம டிடி என்ன இப்படி நடித்திருக்கிறார் என்று அதிர்ச்சியடைந்தனா். இந்நிலையில் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிவரும் துருவநட்சத்திரம் படத்தில் டிடி நடித்து வருகிறார். மேலும் ஜி.வி பிரகாஷ் நடித்து வரும் சர்வ தாளமயம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜீவ்மேனன் இயக்குகிறார். இப்படி தொடா்ந்து வெள்ளித்திரையில் நடித்து வரும் காரணத்தால் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் தலைக்காட்டாமல் இருந்தார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

தற்போது டிடி ரசிகா்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இருக்கிறார். அது என்னவென்றால் மீண்டும் விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். புதிய நிகழ்ச்சியான என்கிட்டே மோததே என்ற ஷோ மூலம் என்ட்ரி கொடுக்கிறார். விஜய் டிவியில் புதியதாக ஆரம்பமாக இருக்கிற என்கிட்டே மோததே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் டிடி. இதை அறிந்த அவருடைய ரசிகா் பட்டாளம் மகிழ்ச்சியில் உள்ளனர்.