தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன்கல்யாண் நடித்த Agnyaathavaasi என்ற படம் இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஆந்திர அரசு சிறப்பு அனுமதி ஒன்றை அளித்துள்ளது.

அதாவது இந்த படத்தை திரையரங்குகளில் இடைவெளியின்றி 24 மணி நேரமும் திரையிட்டு கொள்ளலாம் என்ற அனுமதியை அரசு அளித்துள்ளது. எனவே ஆந்திர திரையரங்குகளில் இந்த படம் நாள் ஒன்றுக்கு 8 காட்சிகள் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே இதுவரை இப்படி ஒரு அனுமதி எந்த ஒரு நடிகரின் திரைப்படத்திற்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகி என்பதும் அனிருத் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது