தரமணி படத்தின் மூலம் நடிப்பில் புதிய பரிணாமம் பெற்ற நடிகை ஆண்ட்ரியா வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் பிரசன்னா நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதே படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க மடோனா செபாஸ்டியனும் ஒப்பந்தமாகியுள்ளார். இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை

விடியும் முன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி குமார் இயக்கவுள்ள அடுத்த படமான இந்த படம் முழுக்க முழுக்க த்ரில் கதையம்சம் கொண்டது என்றும், இந்த படத்தின் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக த்ரில் காட்சிகளை கொண்ட படம் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

முழுக்க முழுக்க த்ரில் படமான இந்த படத்தில் காமெடி ரோலில் யோகிபாபு நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.