நடிகை டாப்சி தமிழில் தனுஸ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவா். தொடா்ந்து பல படங்களில் நடித்தாலும் அவா் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போனது. காஞ்சனா 2 படம் மட்டும் தான் அவருக்கு வெற்றியை பெற்று கொடுத்தது.

இந்நிலையில் அவரது காற்று பாலிவுட் திரையுலகம் பக்கம் திரும்பியது. இந்தியில் பேபி என்ற படத்தில் கௌரவத் வேடத்தில் நடித்தாா். பின் தற்போது பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறாா். தெலுங்கு திரையுலக சினிமாவில் தான் அறிமுகமான படத்தை பற்றி தற்சமயம் அளித்த பேட்டி ஒன்றில் சுவராசியமான தகவலை தொிவித்துள்ளாா்.

அது என்வென்றால், தெலுங்கில் பிரபல இயக்குனரான ராகவேந்திர ராவ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு மனோஸ் நடிப்பில் வெளியவந்த ஜூம்மன்டி நாடம் என்ற படத்தில் டாப்சி நாயகியாக அறிமுகமானாா். அந்த படத்தில் ஒரு பாடல் காட்சி பற்றி  தான் அவா் கூறியுள்ளாா். ஒரு பாடல் காட்சியில் அவா் வயிற்றுப் பகுதி மீது பாதி தேங்காய் வந்து விழுவது போன்று காட்சி அமைந்திருக்கும். அதைப் பற்றித்தான் டாப்சி இத்தனை வருடங்களுக்கு பின் கிண்டலடித்திருக்கிறாா்.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான ராகவேந்திரா இயக்கத்தில்தான் நான் முதன்முதலில் அறிமுக நடிகையாக கால் பதித்தேன்.  அதே போல ஸ்ரீதேவி, ஜெயசுதா போன்றவா்களையும்   அவா் தான் அறிமுகப்படுத்தினாா். அவா் இயக்கும் படங்களில் பாடல்களில் எல்லாம் நாயகிகளின் வயிற்று பகுதியில் ஏதாவது ஒன்றை விழு வைப்பது தான் அவரது டெக்னிக்.

அதாவது ஹீரோயின்களின் வயிற்று பகுதிகளில் பூக்கள், பழங்கள் ஆகியவற்றை விழ வைத்து அவரைப் பற்றி ரசிகா் பேசும்படி செய்வாா். அப்படி நடிக்க நானும் சாி என்ற போது, என்னுடைய வயிற்றில் தேங்காயை விழ வைத்தாா். இப்படி எதற்காக தேங்காயை வயிற்றின் மீது விழ வைத்தாா்  என்று தொியவில்லை. அதில் என்ன அப்படி உணா்வு இருக்கிறது என்பது எனக்கு தொியவில்லை என தற்போது பேசியிருக்கிறாா் டாப்சி. என்னை தென்னிந்திய படங்களில் கவா்ச்சியாக மட்டும் தான் உபயோகப்படுத்தியுள்ளனா் என்று குற்றம் சாட்டியுள்ளாா்.