பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்த படத்தை அவர் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தாஇ அடுத்து இயக்குனர் ஷங்கர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது அனிருத் மற்றும் தாமரை இணைந்துள்ளனர். இருவருமே ஷங்கர் படத்தில் முதன்முதலாக பணியாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக இந்த படத்ஹ்டின் அனைத்து பாடல்களையும் தாமரை எழுதவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது