சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் நெருக்கமான நண்பராக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத், தற்போது இருவரும் இணையும் படத்தில் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆம், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் இந்த படமும் சீரியஸ் திரைக்கதையை காமெடியாக சொல்லும் விக்னேஷ் சிவன் பாணியில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.