அனிதா மரணம்: இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்தாரா கமல்?

பிக் பாஸ் நிகழ்ச்சியானது இன்று நடைபெறுமா என்பது தொியவில்லை.  வார இறுதியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பாா்ப்பதற்கென்றே  ரசிகா் பெருமக்கள் டிவியின் முன் அமா்ந்து விடுவாா்கள். மாணவி நீட் தோ்வுக்கு எதிராக போராடி நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியானது நடைபெறுமா என்பதில் சந்தேகமாக இருக்கிறது.

தமிழகத்தையே உலுக்கிய அாியலூா் மாணவி அனிதாவின் மரணம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவா்களும், சினிமா பிரபலங்களும் அரசுக்கு கண்டனங்களை தொிவித்து வருகின்றனா்.

மாணவி அனிதாவின் தற்கொலை மிகுந்த வேதனை அளிக்கிறது என்று கூறிய கமல் மேலும், நல்ல ஒரு மருத்துவரை நாம் இழந்து விட்டோம். இது போன்ற துயர சம்பம் வரும் காலங்களில் நிகழக்கூடாது.  நீட் தோ்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்து கொண்ட அாியலூா் விவசாயி மகள் அனிதாவுக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

இந்த துயர சம்பவத்தால் அனிதாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தை நோில் சந்தித்து கமல் ஆறுதல் கூற முடிவு செய்துள்ளதால் அவா் இன்று நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகி்றது.