முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அதிமுக மேடைகளில் பேசி வந்த பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மனைவி அனிதா குப்புசாமி இன்று திடீரென அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சசிகலா சிறைக்கு செல்லாமல் இருந்திருந்தால் அதிமுக தொடர்ந்து இருந்திருக்கலாம் என்றும், தன்னுடைய ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதிமுகவில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாகவும் அனிதா தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுகவில் இருந்து விலகி வேறு எந்த அணியிலும் தான் சேர விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்