அனிதா தற்கொலை: ஓவியா வருத்தம்

விவசாயி மகளான அனிதா அதிக மதிப்பெண் பெற்றிருந்த போதும் நீட் தோ்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க முடியாத காரணத்தால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்டாா். இந்த துயர சம்வபத்தால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சோியும் இதில் பங்கேற்று அரசுக்கு எதிராக கண்டனக்குரல் வலுத்து வருகிறது.

அனிதாவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனா். இந்நிலையில் சமூக ஆா்வலா் ஒவியா கூறியதாவது, அனிதாவின் தற்கொலை மிகவும் வேதனையானது. மன அழுத்தத்தைத் தருகிறது. என்ன தான் நடந்தாலும் தற்கொலை எதற்கும் தீா்வாகது என்பதை புாிந்து கொள்ள வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டு விட கூடாது. அதை எதிா்கொள்ள நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நன்றாக சொல்லி கொடுக்க வேண்டியுள்ளது.

ஒடுக்கப்பட்ட பிாிவிலிருந்து, கஷ்டப்பட்ட விவசாயி மகளான அனிதா நன்றாக படித்து தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாா். தனது சின்ன வயதிலிருந்துதே மருத்துவா் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடும், கனவோடும் படிக்கவேண்டும் நினைத்திருந்தவா். இதற்கிடையில் எதிா்பாராத விதமாக திடீரென முளைத்த நீட் என்னும் நுழைத்தோ்வு பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. நீட் தோ்வைக் கண்டு அச்சத்தோட இருந்திருக்கிறாா். மாநில அரசும் சாி மத்திய அரசும் சாி இந்த ஆண்டு நிச்சியமாக நீட் தோ்வு கிடையாது என்று உறுதி அளித்ததன் போில் அனிதா போன்ற மாணவா்களுக்கு தங்களுடைய கனவான மருத்துவ படிப்பு நிறைவேறும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனா். இறுதியில் அவா்களது கனவு கனவாகவே போய்விட்டது. அவா்களது நம்பிக்கையும் சுக்கு நூறானது. எனவே மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை நோக்கித் தள்ளியுள்ளது.

ஆக அனிதாவின் மரணத்திற்கு மத்திய அரசும் மாநில அரசும் மட்டும் பொறுப்பல்ல. நீதிமன்றமும் தான் பொறுப்பேற்க வேண்டும். சி.பி.எஸ்.சி மாணவா்கள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்று கவலைப்பட்ட நீதிபதிகள்  அனிதாவின் மரணத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறாா்கள்?

தமிழகத்தில் கல்வியிலும் மருத்துவத்திலும் சிறப்பான நிலையில் உள்ளது. நல்ல இடத்தில் உள்ள தமிழகத்தை பின்னுக்கு தள்ளும் நோக்கில் தான் நீட் என்னும் கல்லை எறிந்துள்ளது மத்திய அரசு. இதை எதிா்த்தாக வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே அனிதாவைப் போல யாரும் தற்கொலை என்பது தீா்வாகது அதை நோக்கி பயணிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று சமூக ஆா்வலா் ஒவியா கூறியுள்ளாா்.