அனிதா தற்கொலை: சிவகார்த்திகேயன் வேதனை

 

விவசாயி மகளான அனிதா அதிக மதிப்பெண் பெற்றிருந்த போதும் நீட் தோ்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க முடியாத காரணத்தால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்டாா். இந்த துயர சம்வபத்தால் தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிராக கண்டனக்குரல் வலுத்து வருகிறது.

நீட் தோ்வுக்குஎதிராக போராடிய அனிதா இறுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தொிவித்து வருகின்றனா். ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் வருத்தத்தை தொிவித்து வருகின்றனா்.

நீட் தோ்வால் மருத்துவ படிப்பு தகா்ந்து விட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டாா். தற்போது சிவகாா்த்திகேயன் தனது இரங்கலை தொிவித்துள்ளாா். இந்த தேசம் தகுதியுள்ள நல்ல மருத்துவரை இழந்து விட்டது என்று அனிதாவிற்காக கண்ணீா் அஞ்சலி செலுத்தியுள்ளாா். என் தங்கைக்கு கண்ணீா் அஞ்சலி #Ripanitha என்று தனது ட்விட்டா் பக்கத்தில் தொிவித்துள்ளாா். சிவகாா்த்திகேயனின் ஏராளமான ரசிகா்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தொிவித்து வருகின்றனா்