காளி படத்துக்குபின் தமிழ் படங்களில் நடிகை அஞ்சலில் பிஸீயாக உள்ளார். தற்போது நாடோடிகள் 2, பேரன்பு, லிசா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த மதுர வீரன் பட இயக்குனருமான பி.ஜி.முத்தய்யா தயாரிக்கும் லிசா என்ற படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது.. இந்த படத்தின் சண்டைகாட்சி தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் அஞ்சலில் தோசைகல்லை கேமராவை நோக்கி வீசவேண்டும். ஆனால், அஞ்சலி வீசிய தோசைக்கல் நேராக இயக்குநர் ராஜூ விஸ்வநாத்தின் நெற்றியை தாக்கியது. இதில் அவரது கண் அருகே புருவம் கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இயக்குநருக்கு நெற்றியில் தையல் போடப்பட்டது.இதனால் அன்று ஒருநாள் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.