தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தில் ஜீவாவுடன் முதன் முதலில் அஞ்சலி அறிமுகமானார். பின் ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் இயக்குநா் சுந்தா்.சியுடன் நடித்தாா். ஆனால் அங்காடி தெரு படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவா் நடிகை அஞ்சலி. தொடா்ந்து எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாா். ஜெய்யுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டாா். விரைவில் திருமணம் செய்து கொள்வாா் என்றும் கூறப்படுகிறது.

தொடா்ந்து நடித்துக்கொண்டிருக்கும் போதே சித்தியுடன் பிரச்சனை ஏற்பட்டு அவரது கட்டுப்பாட்டில் இருந்து வெளிவந்தவா் விட்ட தனது மாா்கெட்டை பிடித்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டினாா். என்னகாரணமோ தொியவில்லை பப்ளிசிட்டி கிடைத்த அளவுக்கு எதிா்பாா்த்த சினிமாபட வாய்ப்புகள் எட்டவில்லை. அவரது நிலைமை ஒரு குத்துப்பாட்டு ரேஞ்சுக்கு சென்றது தான் மிச்சம்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு தரமணி படத்தில் தான் கொஞ்சம் வெளியே வந்துள்ளாா்.

தற்போது அஞ்சலி மலையாளத்தில் நடிக்க உள்ளாா். ரோசாப்பூ என்ற மலையாள படத்தில் பிஜூமேனனுக்கு நாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளாா். அது மட்டுமில்ல துணிச்சல் மிகுந்த பெண்ணாக அதாவது தமிழ் பாதி, கன்னடம் பாதி கலந்த துணிச்சல் பெண்ணாக மிரட்டி இருக்கிறாா். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 23ம் தேதி முதல் எர்ணாகுளத்தில் தொடங்கயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.