காலா படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலி பட்டேல்..

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்தில் பாலிவுட் நடிகை அஞ்சலி பட்டேல் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் காலா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 2 படங்கள் வெளியிடப்பட்டது.

இதில் ரஜினிக்கு ஜோடியாக ஏற்கனவே பாலிவுட் நடிகையான ஹூமா குரோஷி நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் ஒரு டெரரான வேடத்தில் மற்றொரு பாலிவுட் நடிகையான அஞ்சலி பட்டேல் நடிக்க இருக்கிறார்.

காலா என்பது கரிகாலன் என்பதன் சுருக்கம் எனவும், நெல்லை மாவட்டத்திலிருந்து மும்பைக்கு சென்று செட்டிலான மக்களை பற்றிய கதை எனவும் பா.ரஞ்சித் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ம் தேதி மும்பையில் தொடங்கப்படவுள்ளது.