அஞ்சனா என்றாலே சன் மியூசிக் சேனலில் அவர் தொகுத்து வந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிதான் அனைவருக்கும் ஞாபகம் வரும்

இந்த நிலையில் அஞ்சனாவுக்கும் நடிகர் கயல் சந்திரனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தற்போது திடீரென சன் மியூசிக் சேனலில் இருந்து அவர் வெளியேறியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இத்தனை வருடம் தனக்கு ஆதரவு கொடுத்த சன் மியூசிக் சேனல், மற்றும் ரசிகர்களுக்கு தனது நன்றி என்றும், அந்த ஷோவில் இருந்து தான் வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். வேறு சேனலில் அஞ்சனா இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்