லோக்பால் அமைக்க வலியுறுத்தி அண்ணா ஹசாரோ மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மன்மோகன் சிங் தலைமயிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது லோக்பால் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்த போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு அண்ணா ஹசாரேவுடன் வலது கரமாக போராடிய அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் கட்சி ஆரம்பித்து முதல்வராகிவிட்டார். கிரண்பேடி புதுச்சேரியின் ஆளுநர் ஆகிவிட்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில், இன்னும் லோக்பால் அமைக்கப்படவில்லை. இதனை கண்டித்து மீண்டும் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அண்ணா ஹசாரேவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

அதில் ஒரு மீம்ஸில், எலக்ஷன் வந்துட்டா போதும் சின்ராசை கையில பிடிக்க முடியாது ஊழலை ஒழிக்க பெட்டு, தலகாணியோட கிளம்பிருவாரு..?! என கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.

நாட்டுக்காக உண்ணாவிரதம் இருப்பதை இப்படி கிண்டல் செய்வது அநாகரீகமானது என சிலர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே 81வயதாகும் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் 3ம் நாளை கடந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலையை பாதிக்கப்பட்டுள்ளது.