தினேஷ் நடிக்க அவருக்கு ஜோடியாக மகிமா நடிக்க அரொல் கரோலி இசையமைப்பில் ராஜ்குமார் இயக்கி உள்ளார்.

படத்தின் தலைப்பு பல  வருடங்களுக்கு முன்பு வந்த அர்ஜூன் நடிக்க வந்த படத்தின் தலைப்பு தலைப்பு புதிது இல்லை அது போல படத்தின் கதையுமே இதற்கு முன்பு வந்த பல படங்களின் கதைகளை தொட்ட சாயலில் இருப்பது பலவீனம் என்பது விமர்சகர்களின் கருத்து.

படத்தின் போஸ்டர்கள் தினேஷ் நடித்த காட்சிகள் உள்ளிட்டவை ஆடுகளம், மெட்ராஸ் போன்ற படத்தின் காட்சிகள் போன்று உள்ளதாகவும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

அரசியலை நம்பினால் அதில் இறங்கி வெற்றி பெற்றால் நாம் ராஜா என நினைக்கும் அட்டகத்தி தினேஷ் அந்த அரசியலின் ஆழம் வரை சென்று பார்த்து விட அதில் இறங்கி அதனால் ஏற்படும் விபரீதங்களை ஜாலியாகவும் சீரியசாகவும் சொல்லி இருக்கும் படம் இந்த அண்ணனுக்கு ஜே.

மட்ட சேகராக தினேஷ். மாலை ஆனாலே  மட்டையாகும் சேகர். தனது அப்பா முருகேசனுடன் சேர்ந்து கள்ளு இறக்கும் வேலை பார்க்கிறார்.

அதே ஊரில் பழைய பார் ஒன்றை லீசுக்கு எடுக்கும் ஓர் அரசியல்வாதிக்கும் கள்ளுக்கடை நடத்தும் இவருக்கும் சண்டை வர அதில் மோதல் ஏற்பட்டு அந்த செல்வாக்குள்ள அரசியல்வாதி தினேசின் அப்பா மயில்சாமியை மாட்டிவிட அதனால் அரசியலில் இறங்கி எதிரிகளை எதிர்ப்பதுதான் கதை.

படத்தின் ஜாலியான காட்சிகள் திரைக்கதை போன்றவையால் படத்தை ஒருமுறையாவது தாராளமாக பார்க்கலாம் என்ற அளவில் உள்ளது.

ஜஸ்ட் பாஸ்