Anpam Kher – பாஜக ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற பாலிவுட் நடிகர் அனுபம் கெர் வாக்காளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகரான அனுபம் கெர் பாஜக ஆதரவாளர் ஆவார். இவரின் மனைவி கிரண் கெர் சண்டிகர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

எனவே, அந்த தொகுதியில் அவருக்கு ஆதரவாக அனுபம் கெர் வாக்குகள் சேகரித்து வருகிறார். அப்போது, வாக்கு கேட்பதற்காக ஒரு கடைக்குள் சென்றார். அப்போது அங்கிருந்த கடையின் உரிமையாளர், ஒரு சீட்டை எடுத்துக்காட்டி, இது 2014ம் ஆண்டு பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை. இதில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. எப்படி பாஜகவுக்கு வாக்களிப்பது? என அவரிடம் கேட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத அனுபம் கெர் அவருக்கு எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பத்தை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.