மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வரும் அனுபமா பரமேஸ்வரன் இந்திய கிரிக்கெட் வீரர் பூம்ராவுடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேமம் படத்தின் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து  மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழிலும்  நடிக்கத் தொடங்கினார்.

இதையும் படிங்க பாஸ்-  வெளிச்சத்துக்கு வந்த அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்

ஆனால் அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படியாக படங்கள் எதுவும் அவரிடம் இருந்து வெளிவரவில்லை. ஆனாலும் சமுக வலைதளங்களில் ஆக்ட்டீவாக செயல்பட்டு தொடர்சியான பதிவுகள், டப்மாஸ் என ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வந்தார்.

இதையடுத்துக் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மலையாள மீடியா உலகில் அனுபமா இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக செய்திகள் பரவியது. பும்ரா டிவிட்டரில் மொத்தமாக 25 பேரை மட்டுமே ஃபாலோ செய்கிறார். அதில் பெரும்பாலனவர்கள் கிரிக்கெட் சம்பந்தமான பிரபலங்கள். ஆனால் பும்ரா ஃபாலோ செய்யும் ஒரே ஹிரோயின் அனுபமா பரமேஸ்வரன் மட்டுமே. இதுதான் இந்த வதந்திகளுக்குக் காரணம்.

இதையும் படிங்க பாஸ்-  காமெடி நடிகரை அறைந்த பிரகாஷ்ராஜ்

இதுபற்றி அனுபமா இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘பும்ரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும். இதுவரை நான் அவரை சந்தித்தது கூட இல்லை. நாங்கள் இருவரும் காதலிப்பதாக பரவும் செய்தி பொய்யானது. இப்படி எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் ஒரு பெண்ணை பற்றி சமூக வலைதளத்தில் வதந்தி பரவியது மிகவும் கஷ்டமாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.