சமீபத்தில் கிறித்தவ பாடல்களை பாடப்போகிறோம் என்று முறைப்படி அறிவிக்கப்பட்ட பிரபல கர்நாடிக் கலைஞர் ஓ.எஸ் அருண் மீது சில இயக்கங்கள் தங்கள் பலத்த எதிர்ப்பை பதிவு செய்தன.

இதுபோல பதட்டமான குழப்பங்களினால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார் அருண். பிரபல மசாலா நிறுவனம் அதை ஸ்பான்ஸர் செய்து இருந்ததும் அந்த நிறுவனம் கிறித்தவ நிறுவனம் மதம் மாற்ற முயல்கிறது என்பதுவும் சில இயக்கங்களின் குற்றச்சாட்டு.

இந்நிலையில் அனுராதா ஸ்ரீராம் பாடிய ஒரு ஆல்பத்திலும் சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் பாடப்பட்ட சில பாடல்கள் உள்ளன. அவை அனைத்தும் அருமையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட மதப்பாடல்களை மட்டுமே அவர் கர்நாடக சங்கீதத்தில் பாட வேண்டும் என்பதே சில மதரீதியான நெட்டிசன்களின் குற்றச்சாட்டு.

ஒரு வாரப்பத்திரிக்கையில் வந்திருக்கும் இணைய செய்திக்கு பலர் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இசைக்கு மதம் மொழி ஏது எந்த மொழியில் வேண்டுமானாலும் எந்த இசையிலும் எந்த கடவுளையும் வாழ்த்தலாம் தவறில்லை என்று ஒரு சாராரும், அவர் பாடியது தவறுதான் என்று சிலரும், மற்றும் சிலர் இதில் தவறில்லை ஆனால் மத ரீதியான பிரச்சாரங்களை இந்த பாடல்களை இவரை பாடவைத்துவிட்டு பின்பு பாருங்கள் இவரே எங்கள் பாடல்களை   பாட வந்துவிட்டார் என்ற ரீதியில் கிறித்தவ நிறுவனங்கள் பிரச்சார ரீதியாக செயல்படுவதாகவும் பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.