அனுஷ்கா, பிரபாஸ் நடித்த ‘பாகுபலி 2′ படத்தில் ஒரு வசனம் வரும். நீ வெட்ட வேண்டியது கைகளை அல்ல, தலையை’ என்று. கிட்டத்தட்ட அதே வசனத்தை நடிகை அனுஷ்கா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

அனுஷ்கா நடித்த ‘பாகமதி’ படம் வரும் 26ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகை அனுஷ்கா பேசினார். அப்போது பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றன்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பது பாலியல் தொல்லைகள் தான். குறிப்பாக குடும்ப உறுப்பினர்களே பாலியல் தொல்லை தருகின்றனர்.’

இனிமேல் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய கைகளை வெட்ட வேண்டும் என்று ஆவேசமாக பேசினார். அனுஷ்காவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.