பிரபல நடிகை அனுஷ்காவின் திருமணத்தை பாகுபலி படங்களின் இரு பாகங்கள் முடிந்தவுடன் நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்திருந்தனர். ஆனால் ‘பாகமதி’ படத்தில் மீண்டும் அவர் கமிட் ஆனதால் இந்த படம் முடியும் வரை காத்திருந்தனர்.

இந்த நிலையில் ‘பாகமதி’யும் முடிந்துவிட்டதால் இந்த ஆண்டுக்குள் அனுஷ்காவின் திருமணத்தை நடத்த பெற்றோர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் நாயகி கேரக்டருக்காக அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் அனுஷ்காவின் திருமணம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகும் என கருதப்படுகிறது

அஜித், அனுஷ்கா நடித்த ‘என்னை அறிந்தால்’ சூப்பர் ஹிட் ஆனதால் மீண்டும் இதே ஜோடி திரையில் தோன்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதுதான் தற்போதைய நிலை