சாஹோ திரைப்படத்தில் அனுஷ்காவும் இல்லையாம்.. என்ன ஆச்சி!

பாகுபலி திரைப்படத்திற்கு அடுத்து பிரபாஸ் சாஹோ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அதற்காக நீண்ட நாட்களாக கதா நாயகி தேடல் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது.

பின்னர் அந்தத் திரைப்படத்தில் அனுஷ்கா நாயகியாகத் தேர்வானார். அதுவும் இப்போது இல்லை என்பது தான் செய்தி. ஆம், சஹோ திரைப்படத்தில் நடிக்கக் கேட்ட அதே தேதிகளில் அனுஷ்கா ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

எனவே சஹோ திரைப்படத்தில் இருந்து அனுஷ்கா விலகியதாகவும் மீண்டும் திரைப்பட குழுவினர் புதிய நாயகியைத் தேடி வருகின்றார்களாம். இந்தத் திரைப்படத்தினை பிரபல இயக்குநர் சுஜித் இயக்குகின்றார்.